Enable Javscript for better performance
மைலம் சிட்பண்டில் பணம்  கட்டியவர்கள் புகார் கொடுக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மைலம் சிட்பண்டில் பணம்  கட்டியவர்கள் புகார் கொடுக்கலாம்

    By  காஞ்சிபுரம்  |   Published on : 11th July 2013 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஏலச் சீட்டு நடத்தி மோசடி செய்த மைலம் சிட் பண்டில் பணம் கட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் புகார் கொடுக்கலாம் என்று மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
     ÷இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை: சென்னை, தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கடலூர், காரைக்குடி, சத்தியவேடு (ஆந்திரம்) ஆகிய இடங்களில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள மைலம் சிட்பண்ட் உரிமையாளர் இளம்பூர்ணன், லாவண்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
     ÷சிட்பண்டில் பணம் கட்டி ஏமாற்றப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் கொடுக்கலாம். மேலும் 044 - 2722 8900 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்
     பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai