சுடச்சுட

    

    செங்கல்பட்டில் இயங்கிவரும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வலியுறுத்தி ஒருங்கிணைந்த வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
     பேரணிக்கு காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணி முடிந்தது. பேரணியின்போது, செங்கல்பட்டில் இயங்கிவரும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை மாவட்டத் தலைநகரான பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும். புதிதாக அமையவுள்ள காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட குடும்பநல நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களை காஞ்சிபுரத்தில் அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தை கட்ட உரிய இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் செயலாளர் கண்ணன், உத்தரமேரூர் பார் அசோசியேஷன் தலைவர் ஆறுமுகம், ஸ்ரீபெரும்புதூர் பார் அசோசியேஷன் தலைவர் பழனி, போராட்டக்குழுத் தலைவர் ஜனகன், செயலாளர் எழிழரசன், பொருளாளர் வாசுதேவன் உள்பட காஞ்சிபுரம், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai