சுடச்சுட

    

    சுங்குவார்சத்திரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சந்தவேலூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

      சுங்குவார்சத்திரம் அரிமா சங்க தலைவர் அருள் தலைமை வகித்தார். செயலர்கள் திருவேங்கிடம், ரவி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆளுனர் அரவிந்த்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுங்குவார்சத்திரம் அரிமா சங்க புதிய தலைவராக வாசுதேவன், செயலராக ஏழுமலை, பொருளாளராக கு.ப.முருகன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

      பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை துணை ஆளுனர்கள் நரசிம்மன், மகேஷ் வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai