சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

     மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் குமரக்கோட்டம் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாணவர்கள் சுற்றுப்புற தூய்மை குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். ஊர்வலம் கங்கைகொண்டான் மண்டபம் வழியாக ஏகாம்பரநாதர் கோயிலை அடைந்தது. இதில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், நகர்மன்றத் தலைவர் மைதிலி, நகராட்சி ஆணையர் விமலா மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் காஞ்சிபுரம் கோயில்களில் சுகாதாரத்தை ஏற்படுத்துவதுடன், பாலித்தின் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai