சுடச்சுட

    

    விவசாயிகள் நிலையான மகசூல் பெற வேண்டுமானால் உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் செüந்தரராஜன் தெரிவித்தார்.

      இது குறித்து அவர் கூறியது:

       தொழுஉரம் இடுதல், தக்கைபூண்டு, சணப்பு போன்ற பசுந்தாள் பயிர்கள் சாகுபடி செய்து நிலத்திலேயே மடக்கி உழுதல், பசுந்தழைகளை நிலத்தில் இடுதல் ஆகியன தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒருவழியாகும். உயர் உர உற்பத்தி மையங்களில் உற்பத்தியாகும் பயிருக்கேற்ற சத்துக்களை வழங்கும் உயிர் உரங்களை இடுவது ரசாயன உரங்களுக்கு ஓரளவு மாற்று வழியாகும். இந்த உயிர் உரங்கள் யூரியா, சூப்பர்பாஸ்பேட், போன்ற ரசாயன உரங்கள் அளிக்கும் பயன்களை தரவல்லது.

     அசோஸ்பைரில்லம், அசிட்டோபாக்டா, ரைசோபியம், நீளபச்சை பாசி, அúஸாலா இடுவதால் யூரியா உரத்தால் கிடைக்கும் தழைச்சத்தும் பாஸ்போபாக்டிரியா உயிர் உரம் இடுவதால் சூப்பர்பாஸ்பேட், டி.ஏ.பி. உரத்தால் கிடைக்கும் மணிச்சத்தும் இயற்கையாகவே நிலத்துக்கும் பயிருக்கும் கிடைக்கும்.  இதனால் மண்ணில் ரசாயனத் தன்மை குறைந்து அங்கத்தன்மை கூடும். அது மண்ணின் உயிர்தன்மையை தூண்டி மண்வளத்தைப் பாதுகாத்து, உரச்செலவையும், பூச்சிநோய் பாதிப்பையும் குறைத்து பயிர்வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிக்கச் செய்கிறது.

     இந்த உயர் உரங்களை விதையுடன் கலந்து விதைநேர்த்தி செய்தல், நெல் நாற்றின் வேர்களை நனைத்தல், தொழுஉரத்துடன் கலந்து நிலத்தில் நேரடியாக இடுதல் போன்ற முறைகளில் நிலத்தில் இடலாம்.

      விலையோ மிகவும் குறைவு. ஒரு பாக்கெட் விலை ரூ. 6 மட்டுமே. இது 50 சதவீத மானியத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வழங்கப்படுகிறது.

      மேலும் தகவலுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், உழவர் பயிர்சி நிலையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் என்ற முகவரியிலோ அல்லது 044 - 2722 3043 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai