Enable Javscript for better performance
பணி நிறைவுப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    உத்தரமேரூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து திங்கள்கிழமை பணி ஓய்வுபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உத்தரமேரூர் தாலுக்கா தலைவர் அரிமா இரா.கோபிக்கு, பணி நிறைவு பாராட்டு விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் டி.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஆர்.குழந்தைவேலு முன்னிலை வகித்தார். செயலாளர் வி.நல்லமுத்து வரவேற்றார். தாசில்தார் கே.தேவராஜன் பணி ஓய்வு ஆணை வழங்கி பாராட்டி பேசினார்.  மாவட்டத் தலைவர் வி.கோவிந்தராசன், மாவட்ட செயலாளர் கே.சுடர்மணி மாவட்ட துணைச்செயலாளர் எ.தசரதன், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தாசில்தார் வி.தென்னரசு, உத்தரமேரூர் சோழா அரிமா சங்கத் தலைவர் ஜி.காளிதாஸ், செயலாளர் டி.வீராசாமி, பொருளாளர் அரசு வழக்கறிஞர் எம்.மணி ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.  பணி ஓய்வுபெற்ற இரா.கோபி ஏற்புரையாற்றினார். தாலுக்கா பொருளாளர் கே.ராகவன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai