Enable Javscript for better performance
பேரணி செல்ல முயன்ற  சிஐடியூ.வினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பேரணி செல்ல முயன்ற  சிஐடியூ.வினர் கைது

    By ஸ்ரீபெரும்புதூர்,  |   Published on : 12th July 2013 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒரகடம் பகுதியில் தனியார் தொழிற்சாலையை நோக்கி பேரணி செல்ல முயன்ற சவுந்திரராஜன் எம்எல்ஏ உள்ளிட்ட சிஐடியுவினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஒரகடம் சிப்காட் வளாகத்தில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இத்தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கடந்த 36 நாட்களாக தொழிற்சாலையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க வலியுறுத்தி சிஐடியு பொதுசெயலாளர் சவுந்திரராஜன் தலைமையில், மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட சிஐடியுவினர் 80 பேர் ஒரகடம் பகுதியில் இருந்து தொழிற்சாலை நோக்கி வியாழக்கிழமை அனுமதியின்றி  பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து சவுந்திரராஜன் எம்எல்ஏ உள்ளிட்ட அனைவரையும் கைது செய்த ஒரகடம் போலீஸார், அவர்களை அனைவரையும் வாரணவாசி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai