Enable Javscript for better performance
மணல் லாரி மோதி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபாத்தில் மணல் லாரி மோதி, பெண் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

     வாலாஜாபாத் வெள்ளேரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் மனைவி அஞ்சம்மாள் (44). கூலித் தொழிலாளி. இவர் புதன்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக வாலாஜாபாத் மின் பொறியாளர் அலுவலகம் அருகே சாலையைக் கடக்க முற்பட்டார். அப்போது பழைய சீவரத்தில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி அஞ்சம்மாள் மீது மோதியது. இதில் அஞ்சம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைத் தொடர்ந்து மணல் லாரி டிரைவரை தப்பி ஓடினார்.

     வாலாஜாபாத் போலீஸார் அஞ்சம்மாளின் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai