சுடச்சுட

    

    கடல்வாழ் உயிரினக் காட்சியக  இடம்: அமைச்சர் ஆய்வு

    By செங்கல்பட்டு,  |   Published on : 13th July 2013 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமையவுள்ள இடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாமல்லபுரத்தில் ரூ.250 கோடி செலவில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இதையடுத்து, இத்திட்டம் குறித்து ஆய்வு செய்யும் வகையிலும், காட்சியகம் அமையவுள்ள இடத்தைப் பார்வையிடுவதற்காகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, சுற்றுலா வளர்ச்சிக்கழகத் துறைத் தலைவர் அருள்மொழிதேவன் ஆகியோர் வியாழக்கிழமை வந்தனர்.

    அப்போது கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தின் மாதிரி வரைபடத்தை அவர்கள் ஆய்வு செய்தனர்.

      மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் எம். கோதண்டபாணி,  மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் முரளிதேவி, அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பி.ஏ.எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai