சுடச்சுட

    

    செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி தைலாவரம் அருகில் அரசு பஸ் மோதியதில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    செய்யூரைச் சேர்ந்தவர் பிரவீண் குமார் (22). அவர் சக மாணவர்களுடன் வீடு எடுத்து செங்கல்பட்டை அடுத்த எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்துவந்தார். வியாழக்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு சாலையில் நடந்து செல்லும்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

      இதுகுறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    மற்றொரு சம்பவத்தில் கார் மரத்தில் மோதியதில் ஒருவர் இறந்தார். கோவையில் உள்ள பிரபல துணிக்கடையின் மேலாளர் திருச்சி, உறையூரைச் சேர்ந்த மைக்கேல் நிஜேஷன் (39). இவர் சென்னையில் உள்ள துணிக்கடைக்கு சில ஊழியர்களை காரில் அழைத்துவந்தார். சதீஷ் என்பவர் காரை ஓட்டிவந்தார். கூடுவாஞ்சேரி தைலாவரம் அருகில் கார் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியது. இதில் மைக்கேல் நிஜேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

     இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai