சுடச்சுட

  

  செங்கல்பட்டை அடுத்து கூடுவாஞ்சேரி பெருமாட்டு நல்லூரில் தொகுப்பு வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் சேதமடைந்தன.

   கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூரில் அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பிரசவத்துக்காக தாய் வீடு சென்றுள்ளார். தாயார் வீட்டைப் பூட்டிவிட்டு விவசாய கூலி வேலைக்குச் சென்றிருந்தார்.

  பூட்டிய வீட்டில் இருந்து புகைவருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றியுள்ளனர். அதற்குள் தீமளமளவென்று எரிந்தது. உடனடியாக மறைமலைநகர் தீயணைப்புக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் எரிந்து கருகின. கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai