Enable Javscript for better performance
நாளை சப்வத்சராபிஷேக விழா- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரை அடுத்த தாழம்பூர் நாவலூரில் கிருஷ்ணாநகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் ஆலய ஐந்தாம் ஆண்டு சப்வத்சராபிஷேக விழா ஜூலை 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

    ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ மருகப்பெருமான், ஸ்ரீ விஷ்ணுதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீ நாகதேவதைகள் முதலான பரிவார தெய்வங்கள் உடனாகிய சரஸ்வதி, லட்சுமி, தாய் மூகாம்பிகை ஆகிய த்ரிசக்தி தேவிகளுக்கு நிகழும் விஜயவருஷம். ஆனி மாதம் 30-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதி உத்திர நட்சத்திரம் அம்ருதயோகம் கூடிய சுபதினத்தில் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் ஆலய சப்வத்சராபிஷேகம் பிரதிஷ்டாதினம் ஐந்தாம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவை திருவேற்காடு ஆதி கருமாரி பட்டர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப ஸ்வாமிகளால் பூஜை செய்யப்பட்டு நடத்தப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai