சுடச்சுட

    

    மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்

    By ஸ்ரீபெரும்புதூர்  |   Published on : 13th July 2013 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொளச்சூர் பகுதியில் புதிதாக ரூ 38 லட்சம் மதிப்பில் துவக்கப்பட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மொளச்சூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட மொளச்சூர் ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்தது. அதற்கான விழாவுக்கு மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள், உத்தரமேரூர் எம்எல்ஏ பா.கணேசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பூமிபூஜையை துவக்கிவைத்து அடிக்கல் நாட்டினார். விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சிவகுமார், மாவட்டக் கவுன்சிலர் குமாரவடிவேலு, வட்டார மருத்துவ அலுவலர் வசுமதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சீனிவாசன், ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜோசப், பாலமுருகன், ஒன்றிய செயலாளர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    புதிதாக துவக்கப்பட உள்ள மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மொளச்சூர், திருமங்கலம், சந்தவேலூர், குன்னம், எச்சூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவர்.

    தாற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு:

    மொளச்சூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் வரை மொளச்சூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் தாற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட உள்ளது. அக்கட்டடத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வெள்ளிக்கிழமை ரிப்பன் வெட்டி திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai