சுடச்சுட

    

    வழக்குகளை சந்திக்கத் தயார்: காடுவெட்டி குரு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 13th July 2013 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசு எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தெரிவித்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் மாமல்லபுரம் வன்னியர் சங்க இளைஞர் பெருவிழா ஆகியவற்றின்போது வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு குறிப்பிட்ட சமுதாயத்தினை அவதூறாகப் பேசியது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்குகள் செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.

    இந்த வழக்குகள் தொடர்பாக இரு நீதிமன்றங்களிலும் காடுவெட்டி குருவை போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிமன்ற நீதிபதிகளும் வரும் ஜூலை 26 வரை குருவின் காவலை நீட்டித்து உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து காடுவெட்டி குரு செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த உத்தரவை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் என்னை தமிழக அரசு கைது செய்துள்ளது. இதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பொய்வழக்குகளை போட்டுள்ளது இந்த நாட்டு மக்களுக்கேத் தெரியும். இது பழிவாங்கும் நடவடிக்கை. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதைச் சந்திக்க தயார் என்றார் காடுவெட்டி குரு.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai