சுடச்சுட

    

    : காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநில மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான எல். சசிகலா புஷ்பா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சரும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான டி.கே.எம். சின்னையா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

     வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய மகளிர் அணியினர் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், மொளச்சூர் இரா. பெருமாள், மகளிர் அணி இணைச் செயலாளர் சக்தி கோதண்டம், துணைச் செயலாளரும் தமிழ்நாடு சமூக நலவாரியத் தலைவருமான நடிகை சி.ஆர். சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai