சுடச்சுட

  

  செங்கல்பட்டை அடுத்த ஓட்டேரி அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, கேளம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு ஆகியவற்றில் இரவுக் காவலில் இருந்த காவலாளிகள் சனிக்கிழமை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

  சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் சையத் என்பவர், வண்டலூரை அடுத்த ஓட்டேரி சரஸ்வதி நகர் வள்ளலார் தெருவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் கட்டி இரு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு விட்டுள்ளார்.

  அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (56) இரவு நேரக் காவலாளியாக வேûப் பார்த்து வந்தார்.

  ஆறுமுகம் தினமும் மாலை 6 மணிக்கு வேலைக்குச் சென்று இரவுக் காவல் முடிந்ததும்   காலை 7 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குச் சென்ற அவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

  அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள கார் பார்க்கிங் அருகில்தான் ஆறுமுகம் காவல் காப்பது வழக்கம்.

  சனிக்கிழமை காலையில் கார் பார்க்கிங் வழியாக சென்ற நபர் ஒருவர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

  பின்னர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது ஆறுமுகம் முகம், கழுத்து, மார்பு, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

  இதையடுத்து உடனடியாக ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக செங்கல்பட்டு டி.எஸ்.பி. குமார், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று ஆறுமுகத்தின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட இடம் அருகில் மதுபாட்டில்கள் கிடந்துள்ளன. அடுக்குமாடிக் கட்டடத்தில் திருடு எதுவும் போகவில்லை.

  அதனால் திருட வந்தவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துப் போராடியபோது திருடர்களால் ஆறுமுகம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பாரா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? என ஓட்டேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  மற்றொரு சம்பவம்: இதே போன்று திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் தையூரில் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் இரவு நேரக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் தையூர் சின்னம்மா நகரைச் சேர்ந்த மாரி (36). இவர் செங்கன்மால் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் 3 தினங்களுக்கு முன்பு இரவு நேரக் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

  இவர் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் குடியிருப்புக் கட்டடத்தில் இரவுநேரக் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

  சனிக்கிழமை வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள காவலாளி அறையில் மாரியின் முகம் மற்றும் மார்பு பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

  இது குறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai