சுடச்சுட

    

    ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: 3 பேர் கைது

    By காஞ்சிபுரம்  |   Published on : 14th July 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தில் ஏ.டி.எம். மையத்தை கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் கூட்டுசாலையில் சனிக்கிழமை ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இந்த விசாரணையில் அவர்கள் சின்ன காஞ்சிபுரம் ஆடிசன் பேட்டைத் தெருவைச் சேர்ந்த ஆறு (எ) ஆறுமுகம் (24), நசரத்பேட்டையைச் சேர்ந்த சீனு (எ) சீனுவாசன் (23), வள்ளல் பச்சையப்பன் தெரு குட்டைமேட்டைச் சேர்ந்த தினேஷ் (27) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆர்ப்பாக்கம் வயல்வெளியில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 1,534 மீட்டர் மின்சார வயர், ஜூன் 27-ல் காஞ்சிபுரம் மடம் தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி, காமராஜர் சாலையில் உள்ள கன்னியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம் திருமேற்றலீஸ்வரர் கோயில்களில் உண்டியலை உடைத்து திருடியது உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai