சுடச்சுட

    

    கத்தியால் குத்தி செல்போன் பறித்த 4 பேர் கைது

    By ஸ்ரீபெரும்புதூர்,  |   Published on : 14th July 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீபெரும்புதூர் அருகே நள்ளிரவில் மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்களை மடக்கி கத்தியால் குத்தி செல்போன் பறித்து சென்ற பெண் உள்ளிட்ட நால்வரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சுங்குவார்சத்திரம் அடுத்த பண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் குரியன் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (28). இருவரும் நண்பர்கள். இந்நிலையில் குரியன் மற்றும் வினோத் இருவரும் கடந்த 5ஆம் தேதி இரவு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை வழியாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் அருகே வரும்போது மோட்டார்சைக்கிளை மடக்கிய மர்ம நபர்கள் சிலர் குரியனை கத்தியால் குத்திவிட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து குரியன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் நகரியை சேர்ந்த பெண் ஜீவா (36), அதே பகுதியை சேர்ந்த சின்னா (26), காஞ்சிபுரம் அடுத்த டிபி காரை பகுதியை சேர்ந்த ரமேஷ் (26), கார்த்திக் (23) ஆகியோரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் விபசார தொழில் செய்துவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாகி உள்ள செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகு என்பவரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் தேடிவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai