நகராட்சிப் பணியாளர்களுக்கு சீருடை
By காஞ்சிபுரம், | Published on : 14th July 2013 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
: காஞ்சிபுரம் நகராட்சிப் பணியாளர்களுக்கு ரூ. 4 லட்சத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் சீருடைகள் நகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு ரூ. 4 லட்சம் மதிப்பில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 215 பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி காஞ்சிபுரம் நகராட்சியில் சனிக்கிழமை நடந்தது. தலைவர் மைதிலி திருநாவுக்கரசு கலந்துகொண்டு பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் விமலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.