சுடச்சுட

    

    போலி சுங்க அலுவலகம் நடத்தியவரின் வங்கிக் கணக்கு முடக்கம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 14th July 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் போலி சுங்க அலுவலகம் நடத்தி மோசடி செய்த காஞ்சிபுரம் இளைஞரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

    சென்னை மடிப்பாக்கத்தில் போலி சுங்க அலுவலகம் நடத்தி 60-க்கும் மேற்பட்டவர்களை பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக காஞ்சிபுரத்தைத் சேர்ந்த அன்பரசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது கூட்டாளி ஈஸ்வர ராமச்சந்திரனை பிடிக்க தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டது.

    இதற்கிடையில் ஈஸ்வர ராமச்சந்திரனுக்கும், அன்பரசனின் அண்ணன் சுவாமிநாதனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

      இதைத் தொடர்ந்து சுவாமிநாதன் தலைமறைவானார். இவர்கள் இருவரும் சிக்கினால் பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் அன்பரசனின் வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai