சுடச்சுட

    

    182 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

    By ஸ்ரீபெரும்புதூர்  |   Published on : 14th July 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொளச்சூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    மொளச்சூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள் தலைமை தாங்கினார், உத்தரமேரூர் எம்எல்ஏ பா.கணேசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம் சின்னைய்யா சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு மொளச்சூர் பள்ளியைச் சேர்ந்த 182 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் முருகன், ஒன்றிய குழுத் துணைத் தலைவர் சிவகுமார், ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜோசப், பாலமுருகன், மொளச்சூர் ஊராட்சிமன்றத் தலைவர் டோம்னிக், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai