சுடச்சுட

  

  6 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்கமோதிரம்: எம்.பி. அணிவித்தார்

  By காஞ்சிபுரம்  |   Published on : 14th July 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த அரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 6 பச்சிளம் குழந்தைகளுக்கு பி. விஸ்வநாதன் எம்.பி. தங்கமோதிரம் அணிவித்தார்.

  காஞ்சிபுரம் மாவட்ட மூத்த காங்கிரஸ் தலைவரும், ரயில்வே பாதுகாப்பு குழு தலைவர், அரசு மருத்துவமனை கண்காணிப்புக்குழுத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து மறைந்த அரங்கநாதனின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. பி. விஸ்வநாதன் எம்.பி. தலைமையில் நடந்த இந்த விழாவில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 6 பச்சிளம் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மேலும் காசநோய் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு இலவச உடை, உணவுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது.

  தொடர்ந்து காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பஸ் நிறுத்தத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை விஸ்வநாதன் எம்.பி. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.எல்.என்.எஸ். விஜயகுமார், தி.மு.க. நகரச் செயலாளர் சேகர், தே.மு.தி.க. நகரச் செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai