சுடச்சுட

    

    தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயலர் எம்.வேல்முருகன் வரவேற்றார். டி.என்.ஜி.இ.ஏ. மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார்.

    மாநில பொதுச்செயலர் எஸ்.தமிழ்செல்வன், மாநிலச் செயலர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் பேசினர்.

    மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவராக கே.முருகேசன், மாவட்ட துணைத் தலைவராக டி.தனசேகரன், மாவட்டப் பொருளராக கே.பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினராக எம்.எத்திராஜ் ஆகிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வருவாய்த்துறைச் செயலர் அரசு ஆணை மற்றும் மாநில செயற்குழுவின் முடிவின் படியும் இரவு காவல் பார்ப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.

    இத்தீர்மான நகலை வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவது என மாவட்ட செயற்குழு மூலம் தெரிவிப்பது.

    கல்வித்தகுதி அடிப்படையில் கிராமநிர்வாக அலுவலர் பதவி வழங்க கோருதல், புதிய கிராம உதவியாளருக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருதல்.

    காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோருதல் மற்றும் ஜூலை 25-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய மறியல் போரில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் கலந்துக் கொள்வது எனவும்  கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai