சுடச்சுட

    

    குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது

    By காஞ்சிபுரம்  |   Published on : 15th July 2013 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய 2 இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த கண்ணபிரானின் மகன் செல்வம் (30). இதேபோல் செங்கல்பட்டு தாலுக்கா சாலவாக்கத்தை அடுத்த பழவேரி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமியின் மகன் சதீஷ் (37).

    இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

    இதனால் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனனுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

    இப்பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai