சுடச்சுட

    

    சிறையிலுள்ள பா.ம.க.வினரின் குடும்பங்களுக்கு நிதி வழங்க உண்டியல் வசூல்

    By செங்கல்பட்டு  |   Published on : 15th July 2013 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குண்டர் தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருக்கும் பாமகவினரின் 122 குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வன்னிய சமுதாய மக்களிடம் உண்டியல் மூலம் நிதி வசூலிக்கும் நிகழ்ச்சியை மாமல்லபுரத்தில் பாமக துணை பொதுச்செயலர் திருக்கச்சூர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.

    மாமல்லபரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு பெருவிழா நடைபெற்றபோது  மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறை மற்றும் மரக்காணம் சம்பவத்துக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த முயன்ற ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்ட 122 பாமகவினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து சிறையில் உள்ள பாமகவினரின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்க காஞ்சிபுரம் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள வன்னியர்களிடம் உண்டியல் மூலம் நிதிவசூல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மாமல்லபுரம் பாமக நகரச் செயலர் ரா.ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் பி.வி.கே.வாசு முன்னிலை வகித்தார்.நகரத் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் வரவேற்றார். பாமக மாநில துணை பொதுச்செயலர்  மற்றும் முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் ஆறுமுகம் வன்னியர்களிடம் நிதி வசூல் செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் வ.பாலன், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க நகரத் தலைவர் எம்.பி.தயாளன், கமலக்கண்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai