சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியல் பணி: தனியார் இணையதள மையங்களுக்கு அழைப்பு

  By காஞ்சிபுரம்  |   Published on : 15th July 2013 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் வகையில் தனியார் இன்டர்நெட் மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய வாக்குச் சாவடிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் ஆகியன ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

  இந்தப் பணிகளை சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்ற இன்டர்நெட் மையங்கள் மூலம் செய்ய அரசு அறிவித்துள்ளது.

  அதற்கான கட்டணங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரால் சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்ற இன்டர்நெட் மையங்களுடன் மேற்படி பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டி உள்ளது.

  எனவே மாவட்டத்தில் உள்ள சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்ற இன்டர்நெட் மையங்கள் மாவட்ட ஆட்சியருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள் மூலம் உரிய விவரங்களை அளித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai