சுடச்சுட

    

    வீடு, வீடாக பொருளாதார கணக்கெடுப்புப் பணி தீவிரம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 15th July 2013 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தில் வீடு, வீடாகச் சென்று பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வீடுகள் மற்றும் கடைகள் வாரியாகச் சென்று பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக இவர்களிடம் 3 வகையிலான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பச்சை நிறம் கொண்ட "6ஏ' படிவம் வீடு மற்றும் வீட்டோடு இணைந்த கடைகள் குறித்து கணக்குகள் குறிக்கப்படுகின்றன.

    ரோஸ் நிறம் கொண்ட "6பி' படிவம் ஒவ்வொரு பகுதி வாரியாக உள்ள கடைகளின் மொத்த கணக்குகள் குறிக்கப்படுகின்றன.

    மஞ்சள் நிறம் கொண்ட "6சி' படிவத்தில் 8 பேருக்கு அதிகமாக வேலை செய்யும் நிறுவனங்கள் குறித்து கணக்குகள் குறிக்கப்படுகின்றன.

    வீடு, வீடாகச் செல்லும் பணியாளர்கள் மக்கள் கணக்கெடுப்புட்க் பணி போல, வீட்டில் உள்ள பெரியவர்கள் எத்தனை பேர்?, சிறியவர்கள் எத்தனை பேர்?, இதில் வருவாய் ஈட்டுபவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து முழு விவரங்களை சேகரித்து அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்கின்றனர்.

    அதே போல் வீட்டோடு சேர்ந்த கடை மற்றும் சிறியக் கடைகளில், கடையின் உரிமையாளர் யார்? எத்தனை பேர்? வேலை செய்கின்றனர், அக்கடையில் செய்யப்படும் வணிகம் என்ன? என்பது குறித்து கணக்கெடுக்கின்றனர். இதில் 8 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்கள் என்றால், அந்த நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருள் என்ன? உரிமையாளர் யார்?, எத்தனை பணியாளர்கள் உள்ளனர்? என்பது குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.

    அதாவது, குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவ்வாறு கணக்கெடுக்க வரும் நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வரும் நபர்கள் மீது பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் இப்பணிக்கான அடையாள அட்டை உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai