சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜூலை 19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    இது குறித்து ஆட்சியர் லி. சித்ரசேனன் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 19-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு முக்கிய வேளாண்மைத் துறை மற்றும் சார்பு துறைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai