சுடச்சுட

  

  கர்மவீரர் காமராஜரின் 111-வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

  காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் வழங்கினார். மேலும் அப்பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. 1000 வழங்கினார். மேலும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 1000 வழங்கினார்.

  நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்டப் பொதுச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை வகித்து காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருள், சுரேஷ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் காந்தி சாலை மார்க்கெட் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, நகரத் தலைவர் ஆர்.வி. குப்பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவருக்கு சைக்கிள், 50 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் அளவூர் நாகராஜன், நகர துணைத் தலைவர் தணிகாசலம், பிரபாகரன், குணா, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அவளூர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  காஞ்சிபுரம் நகர தே.மு.தி.க. சார்பில் நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான சாட்சி சண்முகசுந்தரம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நிர்வாகிகள் சுப்புராயன், வடிவேல், விஜயன், காதர், மொய்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  கல்பாக்கம் ராஜீவ் காந்தி சிலை அருகில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதில் 50 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் தந்தை அல்லது தாயை இழந்த 50 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்துக்கான காசோலை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. வாயலூர் ஊராட்சித் தலைவர் அசோகன், நகரத் தலைவர் ஏ. பாண்டியன், பொருளார் வி. பாண்டியன், நிர்வாகி அசரப்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

  உத்தரமேரூரில் ...

  உத்தரமேரூர், ஜூலை 15: உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் திங்கள்கிழமை பெருந்தலைவர் காமராஜரின் 111-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் சி.இராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநிலத் தலைவர் எம்.உசேன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். உத்தரமேரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது. சு.சம்பத் கொடி ஏற்றினார். இ.சீனிவாசன் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார்.

  செங்கல்பட்டில்...

  செங்கல்பட்டில் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு காங்கிரஸ் சேவா தளம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு நகர சேவா தள தலைவர் ஏ.வேலு தலைமை தாங்கினார்.

   மாவட்ட சேவாதள தலைவரும் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினருமான வி.சிவக்குமார் காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் குமரவேல், செல்வம், ஜெயராமன், முருகன், பூக்கடை ஞானம், பி.ஆர்.சி.தேவராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் கே.வேணு உள்ளிட்டோரும், தேமுதிக சார்பில் நகர தலைவர் நித்யானந்தம், மார்க்கெட் பிரகாஷ் உள்ளிட்டோரும் செங்கல்பட்டு எம்எல்ஏ அனகை முருகேசனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

   செங்கல்பட்டு செயின் ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி மாணவர்கள் ஊர்வலமாக சென்று செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  செலுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai