சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 1,195 கோயில்கள் உள்ளன. இதில், 56 கோயில்கள் பிரதான தலங்களாக உள்ளன. காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், கைலாசநாதர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், வரதராஜபெருமாள், குமரக்கோட்டம் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இவை தவிர, காவல்துறை சார்பில், பிரதான நுழைவு வாயிலில், மெட்டல் டிடெக்டர் பொருத்தி, கண்காணிப்பு பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.

    பிகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    எஸ்.ஐ. கொன்று புதைப்பு:

    இன்று தோண்டி எடுத்து விசாரணைகாஞ்சிபுரம், ஜூலை 15: கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் உடலை செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்க காஞ்சிபுரம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கலைவாணி (25). இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் காணாமல்போனார். இதுகுறித்து அவரது கணவர் சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுதாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி மாயம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். கலைவாணியின் நெருங்கிய நண்பர் வெங்கடேசனிடம் போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். கலைவாணியை தான் கொன்று, காஞ்சிபுரத்தை அடுத்த வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் ஆற்றில் புதைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இவருக்கு உடந்தையாக அவரது நண்பர் சுப்பன் உள்ளிட்ட 2 பேர் இருந்ததாகத் தெரிகிறது. இந்த கொலை சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்துள்ளது.

    இதற்கிடையில் வெங்கடேசன் கொடுத்த தகவலின் பேரில் கலைவாணியை கொன்று புதைத்ததாகக் கூறப்படும் இடத்தை செவ்வாய்க்கிழமை போலீஸார் தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். தடயங்களின் அடிப்படையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai