சுடச்சுட

    

    100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் மாவட்ட திட்ட அலுவலரை முற்றுகையிட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதின்போது, காஞ்சிபுரத்தை அடுத்த காரை ஊராட்சிக்குள்பட்ட சீயட்டி கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் வழங்கிய மனு:

    100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் உள்ள 140 பேர் 40 நாள்கள் வேலை செய்தோம். ஆனால் இதுவரை கூலி வழங்கவில்லை. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் சரியான பதில் இல்லை. வங்கிக்கு சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். வங்கிக்குச் சென்று கேட்டால், வங்கி கணக்கில் இதுவரை பணம் இல்லை, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தில் போய் கேளுங்கள் என்று கூறினர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதற்கிடையில் மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதிஅரசனை பெண்கள், முற்றுகையிட்டு 100 நாள் திட்டத்தில் செய்த வேலைக்கு உடனடியாக கூலி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai