Enable Javscript for better performance
200 பவுன் மோசடி புகார்:பெண் வி.ஏ.ஓ.விடம் விசாரணை - Dinamani

சுடச்சுட

    

    200 பவுன் மோசடி புகார்:பெண் வி.ஏ.ஓ.விடம் விசாரணை

    By காஞ்சிபுரம்  |   Published on : 16th July 2013 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல லட்சம் பணம், 200 பவுன் நகை மோசடியில் ஈடுபட்டதாக பெண் வி.ஏ.ஓ.விடம் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோட்டூர் கிராம நிர்வாக அதிகாரி அருள்தேவி (38). அருள்தேவி தனது கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பை பயன்படுத்தி பலரிடம் ஆசை வார்த்தைக் கூறி பணம், நகையை திரும்ப தந்துவிடுவதாகப் பெற்றுள்ளார்.

     இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி ராஜேஸ்வரி காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளார். இவ்வாறாக அவர் பலரிடம் ரூ.40 லட்சம் பணம், 216 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai