சுடச்சுட

    

    இடம் வாங்கித்தருவதாக நகை மோசடி:பெண் வி.ஏ.ஓ. கைது; 112 பவுன் மீட்பு

    By காஞ்சிபுரம்  |   Published on : 17th July 2013 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    காஞ்சிபுரம் அருகே, இடம் வாங்கித்தருவதாக பலரிடம், 200 பவுன் நகை, பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் வி.ஏ.ஓ. கைது செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 112 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.

     காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோட்டூரில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணிபுரிபவர் அருள்தேவி (38). இவர், கடந்த 2008-ம் ஆண்டு வி.ஏ.ஓ. பணியிடத்துக்காக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு பெற்று கிராம நிர்வாக அதிகாரியானார். இவர் மீது ஆரம்பம் முதலே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

     இந்நிலையில், இவர் தனது பதவியைப் பயன்படுத்தி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பலரிடம் இடம் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி பல லட்சம் பணம், பல நூறு பவுன் நகைகளைப் பெற்றுள்ளார். ஆனால், யாருக்கும் இடத்தை பதிவு செய்து தரவில்லை. இடத்தை பதிவு செய்து கொடுங்கள், இல்லையேல் வாங்கிய பணம், நகைகளை திருப்பிக் கொடுங்கள் என அவரிடம் கேட்டுள்ளனர். நெருக்கடி முற்றவே, 2 மாதங்களுக்கு முன்பு அருள்தேவி தலைமறைவானார்.

     இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, தன்னிடம் 112 பவுன் நகையை அருள்தேவி பெற்றுக் கொண்டு திருப்பித்தர மறுப்பதாக  எஸ்.பி.யிடம் புகார் செய்தார். இவரைப் போல காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வீரலட்சுமி, பூபாலன், உமாமகேஸ்வரி உள்ளிட்ட 9 பேர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.

    இதில், ராஜேஸ்வரியின் புகாரை பதிவு செய்து, வி.ஏ.ஓ., அருள்தேவியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், உண்மையை ஒப்புக்கொண்ட அவர், நகைகளை அடகு வைத்திருப்பதாகத் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று 112 பவுன் நகைகளை மீட்டனர்.

      இது தொடர்பாக அருள்தேவி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai