சுடச்சுட

    

    திருப்போரூர் அருகே கோயிலில் 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 17th July 2013 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்து, திங்கள்கிழமை இரவு 4 ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

     காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ளது சிறுதாவூர். இங்கு சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூதகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பர், அம்மன், பூதகிரீஸ்வரர், வேதவள்ளி, விநாயகர் உள்ளிட்ட 11 ஐம்பொன் சிலைகள் இருந்தன. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த 11 ஐம்பொன் சிலைகளும் அருகில் உள்ள பாண்டுரங்கர் பஜனை கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

     இந்த நிலையில் 11 ஐம்பொன் சிலைகளில் அப்பர், அம்மன், பூதகிரீஸ்வரர், வேதவள்ளி ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் மாயமாகி இருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.

    திங்கள்கிழமை இரவு மின்தடையை பயன்படுத்தி கள்ளச்சாவி போட்டு கோயிலை திறந்து சிலைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

     இது குறித்து கோயில் அறங்காவலர் விஜயன், திருப்போரூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai