சுடச்சுட

    

    பாலாற்றுப் பாலத்தில் மணல் லாரிகளுக்கு இன்றுமுதல் கட்டுப்பாடு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 17th July 2013 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபாத் பாலாற்றுப் பாலத்தில் மணல் லாரிகள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பாலாற்றுப் பாலத்தில் காலை, மாலை வேளைகளில் மணல் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதாக புகார் வந்துள்ளது.

    மேலும் இந்த அதிவேகத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் பள்ளிச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவித்தனர்.

    எனவே இன்று (புதன்கிழமை) முதல் தினமும் காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையிலும் மணல் லாரிகள் இயக்கக் கூடாது.  இதை வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் குறித்த நேரத்தில் மணல் லாரிகள் இயங்காமல் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai