சுடச்சுட

  

  பெண் எஸ்.ஐ. கொலை: உடலை கண்டுபிடிக்க திணறும் போலீஸார்

  By காஞ்சிபுரம்,  |   Published on : 17th July 2013 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உடலை காணாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கலைவாணி (25).

  இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் மாயமானார். இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கலைவாணியின் இருசக்கர வாகனம் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்தது தெரியவந்தது.

  இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

  வழக்குரைஞரின் குமாஸ்தாவான வெங்கடேசனிடம் போலீஸார் விசாரித்தனர்.

  விசாரணையில் தனக்கும், கலைவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரை வாலாஜா அழைத்துச் செல்லும்போது காரில் இருந்து கீழே தள்ளி கொன்றதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி பஸ் டிரைவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுப்பன் உதவியுடன் காஞ்சிபுரத்தை அடுத்த வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் களத்தூரில் பாலாற்றில் புதைத்துள்ளதாக கூறியுள்ளார்.

  இந்நிலையில் அவரது உடல் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்படும் என்று எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்திருந்தார்.

  அதே போல் செவ்வாய்க்கிழமை காவேரிபாக்கம் வட்டாட்சியர் கார்த்திகேயன், மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன், உத்தரமேரூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், காவேரிபாக்கம் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினர் காவேரிபாக்கம் களத்தூர் சென்று தோண்டிப் பார்த்தனர். ஆனால் சிறு எலும்புகூட சிக்கவில்லை.

  இதனால் வேறு பகுதிகளில் புதன்கிழமை தோண்டும் பணி தொடரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai