சுடச்சுட

    

    செங்கல்பட்டு அருகே பணியில் இருந்த மின்சார ஊழியர் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை இறந்தார்.

    செங்கல்பட்டு மார்க்கெட் மக்கான்சந்தில் வசித்து வந்தவர் பசுபதி (43). இவர் செங்கல்பட்டு மின்சாரத் துறை ஊழியராக பணியாற்றி வந்தார்.

    திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்றுடன் மழை பெய்ததை அடுத்து அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் மின்கம்பங்கள் பழுதாகியதில் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஊழியர்கள் இரவு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதே போன்று செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் காற்று வீசியதில் பழுதாகிய மின்கம்பத்தை பசுபதி உள்ளிட்ட மின்சார ஊழியர்கள் பழுதுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது பசுபதி மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அவர் கீழே விழுந்து அதே இடத்தில் இறந்தார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai