சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு

    By செங்கல்பட்டு  |   Published on : 17th July 2013 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டு ஜே.சி.கே. நகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 7 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

    செங்கல்பட்டு ஜே.சி.கே. நகரில் வசிப்பவர் ரமேஷ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். திங்கள்கிழமை அவரது வீடு திறந்துள்ளதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ரமேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    பின்னர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 சவரன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai