சுடச்சுட

    

    பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக செய்யூர் வட்டம் பேரம்பாக்கம் ஊராட்சித் தலைவர் லாவண்யா மகேந்கர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    ÷இதுகுறித்து அவர் ஆட்சியரிடம் வழங்கிய மனு: காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி பேரம்பாக்கத்தில் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 10 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆனால் இதில் 6 பயனாளிகளுக்கு மட்டும் பணி உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் இல்லாத மாற்று 4 பேருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கிராமசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறவில்லை.

    இதில் அதிமுக பிரமுகரின் தலையீட்டால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. எனவே ஏற்கெனவே கிராமசபையில் தேர்வு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai