சுடச்சுட

    

    சென்னை மாரத்தான் போட்டியில் படப்பை பள்ளி மாணவர் சாதனை

    By dn  |   Published on : 18th July 2013 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி மாணவர்களுக்கான சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த படப்பை ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர் யோகேஷுக்கு பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

    ÷காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் டு பயிலும் மாணவர்கள் யோகேஷ், சிவா ஆகியோர் அண்மையில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மாணவர் யோகேஷ் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, போட்டி அமைப்பாளர்களால் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொண்ட படப்பை பள்ளி மாணவர் சிவா நான்காம் இடம் பிடித்தார்.

    மாணவர்களுக்குப் பாராட்டு: படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெருமை தேடி தந்த மாணவர்கள் யோகேஷ் மற்றும் சிவா ஆகியோருக்கு பாராட்டு விழா படப்பை பள்ளி வளாக்ததில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை வாசுதேவன் யோகேஷ் மற்றும் சிவாவுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai