சுடச்சுட

    

    இரண்டு மாதமாக ஊதியம் வழங்காததுடன், முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்துவிட்டதாக, சீக்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர்.

    இது குறித்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் வழங்கிய புகார் மனு: செய்யூர் தாலுகா கிழக்கு கடற்கரை சாலை யில் சீக்கணாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டாக 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகிறோம்.

    இந்நிலையில் கடந்த 2 மாதமாக மாத ஊதியம் வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது. ஊதியத்தை கேட்டதால், முன்னறிவிப்பின்றி அனைவரையும் வேலையைவிட்டு நீக்கிவிட்டனர். இப்போது குடும்பம் நடத்த வருமானம் இல்லாததால் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே, ஊழியர்கள் நலன் கருதி மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுத்து, 2 மாத சம்பள பாக்கியை பெற்றுத்தரவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai