சுடச்சுட

    

    நவீன தொழில்நுட்பம்: 10 அரசு ஐ.டி.ஐ.க்களில் சிறப்புப் பயிற்சி

    By dn  |   Published on : 18th July 2013 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் வகையில் தமிழகத்தில் 10 அரசு ஐ.டி.ஐ.க்களில் சிறப்பு வகுப்புகள் நடந்த ஹுண்டாய் முடிவு செய்துள்ளது.

    ÷இதுகுறித்து இருங்காட்டுகோட்டை ஹுண்டாய் கார் கம்பெனியின் நிதித்துறை இயக்குநர் சேதுராமன், உற்பத்திப் பிரிவு துணை தலைவர் சாரங்கராஜன், பொதுமேலாளர் (நிர்வாக ஒத்துழைப்பு), பொதுமேலாளர் (மனிதவளம்) ராஜாகுமார் ஆகியோர், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

    ÷ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் ஹுண்டாய் கார் கம்பெனி செயல்படுகிறது. இக்கம்பெனி கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறது. இருங்காட்டுகோட்டை பகுதியில் ரூ.75 லட்சத்தில் வீட்டுக்கு ஒரு கழிவறை, பள்ளிகளுக்கு ரூ. 25 லட்சத்தில் மேஜை, நாற்காலி வழங்கியுள்ளோம். 1.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு 10 ஆண்டுகள் பராமரிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறோம்.

    ÷கார் உற்பத்தியில் இன்றைய நவீன தொழில்நுட்பத்துக்கும், தொழிற் கல்வியில் உள்ள பாடத்திட்டத்துக்கும் சிறிய இடைவெளி உள்ளது. இதை சரிசெய்யும் வகையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தத்து எடுத்துள்ளோம்.

    மேலும் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தத்து எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர 10 அரசு தொழில்நுட்ப நிலையங்களைத் தேர்வு செய்து அங்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்துக்கும் பாடத்திட்டத்துக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும். படித்து முடித்து வெளியேவரும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai