சுடச்சுட

    

    மகளிர் சுயஉதவிக் குழுவினரின் பல்பொருள் அங்காடி திறப்பு

    By dn  |   Published on : 18th July 2013 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பல்பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை படப்பை பகுதியில் நடைபெற்றது.

    ÷படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியில் அமுதசுரபி தான்வாப் மகளிர் சுயஉதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவைச் சேர்ந்த மகளிர்களுக்கு காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கால்நடை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இடுபொருட்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களான இட்லிமாவு, அப்பளம், சத்துமாவு, ஊறுகாய்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சி பெற்ற மகளிர் சுயஉதவி குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கான பள்பொருள் அங்காடி திறப்பு விழா படப்பை பகுதியில் நடை

    பெற்றது.

    ÷விழாவுக்கு கால்நடை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் விமலாராணி தலைமை தாங்கினார், விழாவில் காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கால்நடை வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமாரசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விற்பனை நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai