சுடச்சுட

    

    ஒரகடத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான காலிமனையை அபகரிக்க முயன்ற புகாரில், பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

     சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவரது தாத்தா திருமலை. இவர், 1948-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா ஒரகடத்தில் 35 சென்ட் இடத்தை கோவிந்தராஜுலு என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ.1 கோடி.

     தனது நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க ரமேஷ் கடந்த ஆண்டு முயன்றார். அப்போது ஒரகடம் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவரின் மனைவி லட்சுமி தாயாரம்மாள் அந்த நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடினார்.

    ÷மேலும் இது குறித்து அவர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரமேஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து லட்சுமி தாயாராம்மாள் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் ரமேஷுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

     இதைத் தொடர்ந்து ரமேஷ் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்படி. ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. தர்மலிங்கம், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோரின் மேற்பார்வையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

     இதைத் தொடர்ந்து ஒரகடத்தைத் சேர்ந்த லட்சுமி தாயாரம்மாள் (62), ரவிச்சந்திரன் (57),ஜெயக்குமார் (35) ஆகியோரை போலீஸார் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai