சுடச்சுட

    

    மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

     காஞ்சிபுரம், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே புதன்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் பார்கவுன்சில் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.

      இதில், செங்கல்பட்டில் இயங்கி வரும் மாவட்ட முதன்மை நீதமன்றத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். மகளிர் நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் புதிதாக அமைய உள்ள நீதிமன்றங்களை காஞ்சிபுரத்தில் அமைக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai