சுடச்சுட

    

    டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் உடல்

    By காஞ்சிபுரம்,  |   Published on : 19th July 2013 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரின் உடல் டி.என்.ஏ. சோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கலைவாணி (25). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் மாயமானார்.

    இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் வழக்குரைஞரின் குமாஸ்தாவான வெங்கடேசனிடம் போலீஸார் விசாரித்தனர்.

    விசாரணையில் தனக்கும், கலைவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரை வாலாஜா அழைத்துச் செல்லும்போது காரில் இருந்து கீழே தள்ளி கொன்றதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி பஸ் டிரைவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுப்பன் உதவியுடன் வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் களத்தூரில் பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தார்.

    காவேரிபாக்கம் வட்டாட்சியர் கார்த்திகேயன், மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன், செய்யூர் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம், காவேரிபாக்கம் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினர் ஜேசிபி உதவியுடன் புதன்கிழமை எஸ்.ஐ. கலைவாணியின் உடல் தேண்டி எடுக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    அதில் அந்த உடல் பெண்ணின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த உடல் கலைவாணியின் உடலா? என்பதை கண்டறிய டி.என்.ஏ. சோதனைக்கு உள்படுத்த சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்புடைய வெங்கடேசன், அவருக்கு உதவியாக இருந்து சுப்பன், கார் டிரைவர் சுந்தரம் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai