சுடச்சுட

    

    தடையை மீறி ஆர்ப்பாட்டம்:120 தே.மு.தி.க.வினர் கைது

    By உத்தரமேரூர்,  |   Published on : 19th July 2013 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரமேரூர் பஸ் நிலையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மீது தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாகவும், அதனை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.இரமேஷ்பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வி.பி.ஜான், ஒன்றிய செயலாளர் வி.கன்னியப்பன் முன்னிலை வகித்தனர்.

    பேரூர் செயலாளர் ஜி.கே.வெங்கடேசன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளரும், செங்கை எம்.எல்.ஏ.வுமான அனகை டி.முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.பி.அருண்குமார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஆர்.ஜெகவள்ளி, டி.கஜேந்திரன் தெ.பழனி, எஸ்.கந்தகுருநாதன் ஆகியோர், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய 120 தே.மு.தி.க வினரை உத்தரமேரூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai