Enable Javscript for better performance
சுனாமி குடியிருப்புகள்  பயனாளிகளிடம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சுனாமி குடியிருப்புகள்  பயனாளிகளிடம் ஒப்படைப்பு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 20th July 2013 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருக்கழுகுன்றம் அருகே சுனாமி குடியிருப்புகள் பயனாளிகளிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர கிராமங்கள் 2004-ஆம் ஆண்டு நடந்த சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் கடலோர கிராம மக்களின் உயிர் மற்றும் அவர்களது வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்தனர்.

    இதைத் தொடர்ந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை வழங்கியது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், இந்து அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள் உள்ளிட்டவை, வீடுகளை இழந்து வாடிய மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வந்தன.

    அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ராஜாநகர், வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க ஞானோதயா கல்வி அறக்கட்டளை முன்வந்தது. அதன்படி ராஜா நகருக்கு 50 வீடுகள், வயலூருக்கு 40 வீடுகள் ஒதுக்கப்பட்டன. வீடுகள் கட்டி முடிக்கும் நேரத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் வரைச் சென்றது.

    இதைத் தொடர்ந்து பயனாளிகளைத் தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை நீதிமன்றம் அமைத்தது. அந்த குழு 90 பயனாளிகளைத் தேர்வு செய்தது.

    இவ்வாறு நீதிமன்றக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட 90 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை திருக்கழுகுன்றம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 90 பயனாளிகளுக்கும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வீடுகளின் சாவியை ஒப்படைத்தார்.

    இதில் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் மனோகரன், ஞானோதயா கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏசு மரியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai