சுடச்சுட

  

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்), காஞ்சிபுரம் மண்டலம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து, நடத்துநர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்), காஞ்சிபுரம் மண்டலம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து, நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நடத்துநர் பயிற்சி முடித்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினருக்கு, கடந்த ஜூன், 18-ஆம் தேதி வரை, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு, 2010-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை, பழங்குடி இனத்தவர்களுக்கு கடந்த 3-ஆம் தேதி வரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், 2010-ஆம் ஆண்டு, ஜூன் 30-ஆம் தேதி வரை, பிற்படுத்தபட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு கடந்த 13-ஆம் தேதி வரை, பிற்பட்ட வகுப்பினருக்கு, 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி வரை, இதர வகுப்பினருக்கு, 2010-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை, பதிவு செய்துள்ளவர்கள் பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai