சுடச்சுட

    

    செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

    கூடுவாஞ்சேரி ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் சேகர் (55). கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் வேலைப் பார்த்து வந்தார். சென்னைக்கு செல்வதற்காக வெள்ளிக்கிழமை காலை அவர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வந்தார். நடைமேடைக்குச் செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னைக் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டை நோக்கி வந்த திருமால்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்,  மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

     இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai